டி20 கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல்! இலங்கை, இந்திய வீரர்கள் சரசரவென முன்னேற்றம்
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல்.
இலங்கை, இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னேற்றம்.
டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 801 புள்ளிகளுடன் பிடித்துள்ளார்.
இதுவரை 2வது இடத்தில் இருந்த பாகிஸ்தானின் பாபர் அசாம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களை விளாசியிருந்தார்.
இந்த பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிஷங்கா 677 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் சம்ஷி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.