2022 டி20 உலககோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் நடக்கவுள்ளது. இந்த நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த ஆண்டு மொத்தம் 5 மில்லியன் ரூபாய் மொத்தமாக பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
அரை இறுதியில் தோல்வி அடையும் அணிக்கு தலா 3 கோடியே 26 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில் பரிசு தொகையாக வழங்கப்படுகிறது. இதேபோன்று சூப்பர் 6 சுற்று ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு தலா 32 லட்சம் ரூபாய் இந்திய ரூபாய் மதிப்பில் பரிசாக வழங்கப்படும்.
icc
இதேபோன்று சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறும் அணிக்கு தலா 57 லட்சம் ரூபாய் ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது.
இதேபோன்று முதல் சுற்றில் விளையாடும் அணிக்கு ஒவ்வொரு போட்டியில் வென்றால் தலா 32 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.