இரட்டையர்கள்... ஒருவர் கூகிளின் சுந்தர் பிச்சையை விடவும் கோடீஸ்வரர்: இன்னொருவர்?
கேரள மாநிலத்தை சேர்ந்த குரியன் சகோதரர்களில் ஒருவரான தாமஸ் தற்போது கூகிள் நிறுவனத்தில் பணியாற்றுவதுடன், தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையை விடவும் அதிகம் சம்பாதித்து வருகிறார்.
ஒரே முகத்தோற்றம் கொண்ட
குரியன் சகோதரர்களான ஜார்ஜ் மற்றும் தாமஸ் ஆகிய இருவரும் தங்கள் வெற்றிப் பயணத்தை மாற்றி எழுதி வருகிறார்கள். கேரளாவை சேர்ந்த இருவரும் பிரின்ஸ்டனில் பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றனர்.
அதன் பின்னர் தொழில்நுட்ப துறையில் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக்கொண்டனர். 1996ல் ஒரே முகத்தோற்றம் கொண்ட இரட்டையர்களான சகோதரர்கள் இருவரும் தங்கள் வேலையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தனர்.
இதில் ஜார்ஜ் McKinsey நிறுவனத்திற்கு சென்றார், தாமஸ் ஆரக்கிள் நிறுவனத்திற்கும். அந்த முடிவே இருவரையும் தற்போது முதன்மையான பொறுப்பில் அமர வைத்துள்ளது. ஜார்ஜ் தற்போது NetApp நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தாமஸ் கூகுள் கிளவுட் பிரிவுக்கு தலைமை பொறுப்பில் உள்ளார்.
இணை பிரியாத நண்பர்கள்
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்ற அவர்களின் பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் அவர்களின் பிணைப்பை பலப்படுத்தியது.
தங்களின் வாழ்க்கையின் பெரும்பகுதியில் இணை பிரியாத நண்பர்களாகவே இருவரும் இருந்ததாக ஜார்ஜ் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் கிளவுட் நிறுவனத்தில் பணியாற்றும் 58 வயதான தாமஸ் குரியனின் மொத்த சொத்து மதிப்பு ரூ 15,800 கோடி என்றே கூறப்படுகிறது. ஆனால் NetApp நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜார்ஜ் குரியனின் சொத்து மதிப்பு ரூ 548 கோடி என்றே தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |