பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை: சுவிஸ் பொலிசாரை குழப்பிய மர்மமான வழக்கில் முக்கிய திருப்பம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் மர்மமான வழக்கு ஒன்றை பொலிசார் சாமர்த்தியமாக துப்புத் துலக்கியுள்ளனர்.
பெர்ன் மண்டலத்தில் Kandertal பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் 63 வயதான நபர் இருவரை தள்ளிவிட்ட விவகாரமே தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
2019 நவம்பர் மாதம் 5ம் திகதி அதிகாலை வாகன சாரதி ஒருவர், காயங்களுடன், ஆபத்தான நிலையில் ஒரு இளைஞரை சாலை அருகே சந்தித்துள்ளார். தம்மை இந்த பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்து வந்த நபர் திடீரென்று தள்ளிவிட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அந்த இளைஞர், தமக்கு உதவிய சாரதியிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து அந்த 63 வயதான சுவிஸ் நபர் அதே நாளில் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கின் தன்மை பெர்ன் பொலிசாருக்கு இன்னொரு வழக்கை நினைவுக்கு கொண்டு வந்துள்ளது.
அது 2019 மே மாதம் நிகழ்ந்துள்ளது. இதே பள்ளத்தாக்கில் இருந்து 18 வயதான இளைஞர் ஒருவரின் சடலத்தை அப்போது மீட்டுள்ளனர். இந்த வழக்கில் அதுவரை எந்த துப்பும் துலங்காமல் பொலிசாரை மொத்தமாக குழப்பி வந்துள்ளது.
தற்போது அந்த இளைஞர் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு, இந்த 63 வயது நபருக்கும் அந்த இளைஞருக்கும் அறிமுகம் இருந்ததும், அந்த இளைஞர் இறக்கும் முன்பு வரை இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
கொல்லப்பட்ட அந்த 18 வயது இளைஞர் ஆப்கான் நாட்டவர் என்பதும், இது திட்டமிட்ட கொலை என்பதும் பொலிசார் முடிவுக்கு வந்துள்ளனர்.
தற்போது விசாரணை கைதியாக உள்ள அந்த 63 வயது நபர், கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறா