சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்! நீதிமன்றம் எடுத்த முடிவு
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை வரும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை சித்ரா தற்கொலையில் சந்தேகம்
சீரியல் நடிகை சித்ரா கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதில், சித்ராவின் கணவர் ஹேமந்த் அவரை அடித்து துன்புறுத்தியதால் மனமுடைந்தது தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதுமட்டுமல்லாமல், சித்ராவின் கணவர் ஹேமந்த்தும், ஹேமந்தின் நண்பரான இமானுவேல் ஆகிய இருவரும் தான் தற்கொலைக்கான காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, ஹேமந்த் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளிவந்தார்.
6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்
இதில், சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது, திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், அவரது தந்தை இன்று மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர்," இந்த வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்தில் தான் இருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்த வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்று ஹேமந்த் பல மனுக்களை தாக்கல் செய்கிறார். முதுமை காரணமாக திருவள்ளூர் வரை சென்று வர முடியவிலை" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |