சார்க்கோ இயந்திரம் மூலம் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் விவகாரத்தில் முக்கிய திருப்பம்
சுவிட்சர்லாந்தில், எளிமையாக, தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் என அழைக்கப்படும் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொடர்பில் திடுக்கிடவைக்கும் தகவல் ஒன்று வெளியானது.
எளிமையாக உயிரை மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம்
The Last Resort என்னும் நிறுவனம், நீண்ட கால மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர், தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள உதவும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதற்கு சார்க்கோ (Sarco) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் Schaffhausen மாகாணத்தில், 64 வயது அமெரிக்கப் பெண்ணொருவர் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
ஆனால், அந்தப் பெண்ணின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்த தடயவியல் சிகிச்சை நிபுணர், அந்தப் பெண்ணின் கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து அந்த இயந்திரத்தை உருவாக்கிய நிறுவனத்தின் துணை தலைவரான Florian Willet கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கில் முக்கிய திருப்பம்
இந்நிலையில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறி, அதிகாரிகள் Florian Willetஐ விடுவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |