இறந்தவர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு மீண்டும் வழங்கப்பட்ட "Blue tick": தொடரும் குழப்பம்
ட்விட்டரில் சந்தா செலுத்தினால் மட்டுமே ட்விட்டர் கணக்குகள் புளூ டிக் என்ற நிலையில், திடீரென இறந்தவர்களின் கணக்குகளுக்கும் புளூ டிக் திரும்பியுள்ளதால் ட்விட்டரில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ட்விட்டரில் புளூ டிக்
பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு முன்னர் புளூ டிக் என்ற சிறப்பு அங்கிகாரம், அவர்களை பின் தொடர்பவர்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து எலோன் மஸ்க் சில வாரங்களுக்கு முன்னர், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள அனைவரும் சந்தா முறையில் புளூ டிக் பெறலாம் என அறிவித்திருந்தார்.
மேலும் முன்னர் புளூ டிக் பெற்ற பிரபலங்களின் புளூ டிக்கையும் நீக்குமாறு கூறிய பின்பு, பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்களுக்கும் புளூ டிக்
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பிரபலங்களுக்கு மீண்டும் புளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் சந்தா செலுத்தாமல் புளூ டிக் அங்கிகாரத்தை பெற்றுள்ளனர்.
பிரபல சமையல்காரர் அந்தோனி போர்டெய்ன் மற்றும் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் போன்ற இறந்தவர்களின் கணக்குகளுக்கு, மீண்டும் புளூ டிக் வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கூடை பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் 2020ல் உயிரிழந்தார், பிரபல சமையல்காரர் அந்தோனி போர்டெய்ன் 2018ல் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தா செலுத்தாதவர்களுக்கும் புளூ டிக்
"நான் புளூ டிக்கிற்காக சந்தா செலுத்தவில்லை, மேலும் எனது தொலைப்பேசி எண்ணை நான் யாருக்கும் கொடுக்கவில்லை" என பிரித்தானிய எழுத்தாளர் நீல் கெய்மன் புளூ டிக் பெற்ற பின்பு கூறியுள்ளார்.
For the curious, I'm not subscribed to Twitter Blue. I haven't given anyone my phone number. What a sad, muddled place this has become. pic.twitter.com/Ju125xyoUx
— Neil Gaiman (@neilhimself) April 23, 2023
மேலும் பிரித்தானிய நடிகர் இயான் மெக்கெல்லன் புளூ டிக் பெற்ற பின்பு ”நான் கௌரவத்திற்காக பணம் செலுத்த விரும்பவில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Despite the implication when you click the blue badge that has mysteriously re-appeared beside my name, I am not paying for the "honour".
— Ian McKellen (@IanMcKellen) April 23, 2023