உலக பணக்காரர் எலான் மஸ்கிற்கு கெடு விதித்த ட்விட்டர்!
எலோன் மஸ்க் இந்த ட்விட்டர் கையகப்படுத்துதலுக்காக 46.5 பில்லியன் டொலர்கள் பங்கு மற்றும் கடன் நிதி வழங்க ஒப்புக்கொண்டார்
ட்விட்டர் ஒப்பந்தத்தை முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கிவிட்டதால், Mirae உடனான இந்த ஒப்பந்தம் வரும் நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், வெள்ளிக்கிழமைக்குள் ட்விட்டர் ஒப்பந்தத்திற்கான உடன்படிக்கையை முடித்து விட வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த எலான் மஸ்க், கடந்த சூலை மாதம் ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கினார். இதனால் ட்விட்டர் நிறுவனம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. முன்னதாக, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையான தரவுகளை பொதுவெளியில் ஆதாரத்துடன் வழங்காத வரை ட்விட்டர் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது என மஸ்க் கூறியிருந்தார்.
இந்த நிலையில் போலி கணக்குகள் குறித்த விவரம் வேண்டும் என்ற பெயரில் பொய்யாக காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தில் இருந்து மஸ்க் விலக முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய ட்விட்டர், அவருக்கு வெள்ளிக்கிழமை வரை கெடு விதித்துள்ளது.

Reuters
அதாவது, வெள்ளிக்கிழமை மாலைக்குள் ட்விட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டொலர் உடன்படிக்கையில் மஸ்க் முடித்துவிட வேண்டும் அல்லது சட்ட ரீதியான வழக்கை அவர் சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் வாங்கும் திட்டத்தை கைவிடுவதாக ஏற்கனவே தனது இணை முதலீட்டார்களிடம் மஸ்க் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.