எலோன் மாஸ்க்கிற்காக கடுமையாக உழைத்த மூத்த ட்விட்டர் நிர்வாகி பணி நீக்கம்!
உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாகிய டிவிட்டரில் 7500 ஊழியர்கள் பணியாற்றிய சமயத்தில் தற்போது 2000 பேர் பணியாற்றி வரும் நிலையில் மீண்டும் 200 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.
டிவிட்டரில் மறுசீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன
ட்விட்டர் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை கடினமாக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு பணிநீக்கம் செய்துள்ளனர்.
நிறுவனத்தின் தரவைப் பார்ப்பதற்கு நிறுவனத்தின் உள் செய்தி சேவையான ஸ்லாக் ஆஃப்லைனை தடை செய்துள்ளனர் என பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 ஊழியர்கள் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அவர்களுடைய கருத்தை தெரிவித்துள்ளன.
இந்த பணிநீக்கத்தை சனிக்கிழமை இரவு மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெஷின் லேர்னிங், சைட் ரிலையபிளிட்டி போன்ற முக்கியமான பிரிவில் பணியாற்றிய ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ், டேட்டா சையின்டிஸ்ட், இன்ஜினியர்ஸ் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்தர் க்ராஃபோர்ட் பணிநீக்கம்
எஸ்தர் க்ராஃபோர்ட் என்ற பெண் டிவிட்டர் நிறுவனத்தில் எலோன் மஸ்க்கிற்காக கடுமையாக உழைத்த மூத்த ட்விட்டர் நிர்வாகியாவார்.
அலுவலக மாடியில் தூங்கி தனது உழைப்பை காட்டிய அவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளனர்.
When your team is pushing round the clock to make deadlines sometimes you #SleepWhereYouWork https://t.co/UBGKYPilbD
— Esther Crawford ✨ (@esthercrawford) November 2, 2022