மஸ்க், பைடன் ட்விட்டரை ஹேக் செய்த பிரித்தானிய இளைஞருக்கு சிறை
எலான் மஸ்க், ஜோ பைடன் உட்பட 130 பேரின் ட்விட்டரை ஹேக் செய்த 24 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளைஞருக்கு சிறை
ட்விட்டருக்கு எதிரான பாரிய சைபர் தாக்குதலில் சுமார் 130 பேரின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த ஜோசப் ஜேம்ஸ் கானர் (Joseph James O'Connor) எனும் 24 வயது பிரித்தானிய இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் சுமார் 130 பிரபலமான ட்விட்டர் கணக்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
Credit: Bob Al-Greene / Mashable
மஸ்க், பைடன், கிம் கர்தாஷியன்
இதில் மொடல் அழகி கிம் கர்தாஷியன் (Kim Kardashian), டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), பராக் ஒபாமா (Barack Obama) மற்றும் பில் கேட்ஸ் (Bill Gates) ஆகியோரின் கணக்குகளும் அடங்கும்.
ஜோசப் ஜேம்ஸ் தனது சைபர் தாக்குதலை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நியூயார்க் பெடரல் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
aibc
ஜோசப் தனது குற்றங்கள் அர்த்தமற்றவை என்று கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஜேம்ஸ் ஆன்லைனில் PlugWalkJoe என்று அறியப்பட்டார். பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்த குழுவில் இவரும் ஒருவர்.
மன்னிப்புக் கோரலில், சைபர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 794,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.25 கோடி) நஷ்டஈடாக வழங்க ஜேம்ஸ் ஒப்புக்கொண்டார்.
Jon Nazca/Reuters
British Hacker, prison, Twitter Hacked, Hacker
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |