ரூ 100 கோடி சம்பளத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்... தடாலடியாக வேலையில் இருந்து தூக்கிய எலோன் மஸ்க்
உலகின் மிகப்பெரிய மென்பொருள் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்தியாவில் கல்வி பயின்ற IIT பட்டதாரிகளே உள்ளனர்.
ஒரே ஆண்டில்
பாம்பே IIT பட்டதாரி ஒருவர் பிரபலமான நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிகப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அவரது சம்பளம் சுமார் 8 கோடி என்றாலும், அவருக்கான ஆண்டு வருவாய் என்பது சலுகைகள், நிறுவனப் பங்குகள் என மொத்த மதிப்பு ரூ 100 கோடியை எட்டியது.
ஆனால் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் அவர் வேலையில் இருந்து தடாலடியாக நீக்கப்பட்டார். அஜ்மீரில் நன்கு படித்த குடும்பத்தில் பிறந்தவர் பராக் அகர்வால். அகில இந்திய அளவில் 77 வது இடத்தைப் பெற்று, அகர்வால் 2005ல் ஐஐடி பாம்பேயில் பட்டம் பெற்றார்.
பின்னர், அவர் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர அமெரிக்கா சென்றார். 2011ல் டுவிட்டர் நிறுவனத்தில் இணையும் முன்னர் யாகூ மற்றும் மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.
சட்டத்திற்கு புறம்பானது
எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முன்னர் சுமார் ஆறு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2021 நவம்பர் முதல் 2022 அக்டோபர் வரையில் அகர்வல் பணியாற்றியுள்ளார்.
ஆனால் டுவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கிய பின்னர் தடாலடியாக அகர்வாலை வேலையில் இருந்து நீக்கினார். டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் அந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டு அகர்வால் மற்றும் அவருடன் பாதிக்கப்பட்ட சிலர் சட்ட போராட்டத்தில் குதித்தனர்.
இந்த வழக்கில், எலோன் மஸ்க் மீது வழக்குத் தொடுக்கலாம் என நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |