செயல்படாத ட்விட்டர் கணக்குகள் அகற்றப்படும்: எலோன் மஸ்க் அறிவிப்பால் பயனர்கள் குழப்பம்
ட்விட்டர் செயலற்ற கணக்குகளை அகற்றி காப்பகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
எலோன் மஸ்க் அறிவிப்பு
சமூக ஊடக தளமான ட்விட்டர் பல ஆண்டுகளாக செயலிழந்த கணக்குகளை அகற்றும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது ட்வீட்டில் அறிவித்துள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்கள், தங்கள் மறைந்த உறவினர்கள், நடிகர் நடிகைகள், பிரபலங்கள், நன்பர்கள் ஆகியோரின் கணக்குகளை காணுவது குறித்து கேள்வியெழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, மற்றோரு டீவீட்டில் செயலற்ற கணக்குகள் காப்பகப்படுத்தப்படும் என்றும் கூறினார், ஆனால், இந்த செயல்முறை எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்த விவரங்களையும் மஸ்க் வெளியிடவில்லை.
காப்பகப்படுத்தப்பட்ட கணக்குகளை ட்விட்டர் பயனர்கள் எப்படி அணுக முடியும் என்பதும் உடனடியாகத் தெரியவில்லை.
Elon Musk
இவ்வாறு பல செயலற்ற கணக்குகள் அகற்றப்படும்போது, ட்விட்டர் தளத்தில் உள்ள பயனர்கள் தங்கள் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காணலாம் என்றும் மஸ்க் கூறினார்.
ட்விட்டரின் கொள்கையின்படி, நீண்டகால செயல்படாமல் இருக்கும் பட்சத்தில் தங்கள் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக அகற்றப்படுவதைத் தவிர்க்க, பயனர்கள் 30 நாட்களுக்கு ஒரு முறையாவது உள்நுழைய வேண்டும்.
Elon Musk/Twitter
கடந்த மாதம், ட்விட்டர் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் புளூ டிக்-ஐ நீக்கியது குறிப்பிடத்தக்கது.
சரிபார்க்கப்பட்ட கணக்கை வைத்துக்கொள்ள தனி நபரோ, நிறுவனமோ மாத சந்தா செலுத்த வேண்டும். இவ்வாறு சந்தா முறை கொண்டுவருவதன்மூலம் Bot-களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்கலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.