Twitter-ல் புதிய அம்சம் அறிமுகம்! இனி Block செய்யாமலே ஃபாலோயர்ஸை நீக்கலாம்...
ட்விட்டரில் Block செய்யாமல் ஃபாலோயர்ஸை நீக்கும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் Twitter முக்கியமான இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் ட்விட்டர் புதிய தனியுரிமை தொடர்பான அம்சத்தை வெளியிட்டு உள்ளது.
இந்த அம்சம் தற்போது வெப் வெர்ஷனில் பயன்படுத்தும் ட்விட்டருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ட்விட்டரின் இந்த லேட்டஸ்ட் அம்சம் ஃபாலோயர்ஸை முற்றிலும் பிளாக் செய்யாமல், அவர்களை ஃபாலோயர் லிஸ்ட்டில் இருந்து நீக்க பயனர்களை அனுமதிக்கிறது.
கடந்த மாதம் முதல் ட்விட்டர் இந்த அம்சத்தை டெஸ்ட்டிங் செய்து வந்த நிலையில், தற்போது முதலாவதாக வெப் வெர்ஷனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் பற்றி ட்விட்டர் நிறுவனம் @TwitterSupport மூலம் யூஸர்களுக்கு அறிவித்தது.
இந்த புதிய அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்.
1- முதலில் ப்ரொஃபைல் பேஜ் சென்று Followers-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
2- பின்னர் நீங்கள் எந்த ஃபாலோயரை ரீமூவ் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயருக்கு அடுத்து காணப்படும் த்ரீ டாட் ஐகானை (three-dot icon) க்ளிக் செய்ய வேண்டும்.
3- இறுதியாக குறிப்பிட்ட ஃபாலோயரை லிஸ்ட்டிலிருந்து அகற்ற உதவும் Remove this follower என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த அம்சத்தை பயன்படுத்திய பிறகு உங்கள் ட்விட்கள் ஆட்டோமேட்டிக்காக நீக்கப்பட்டவரின் ட்விட்டர் டைம் லைனில் தெரியாது.
ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளபடி நீங்கள் ரிமூவ் செய்யும் ஃபாலோயர்ஸுக்கு , அவரை உங்கள் ஃபாலோயர் லிஸ்ட்டில் இருந்து தூக்கியதற்கான அறிவிப்புகள் ஏதும் காட்டப்படாது.
இந்த புதிய அம்சம் பெரிய ஃபாலோயர்ஸ் லிஸ்ட் கொண்டுள்ள அதே சமயம் அவர்களை முற்றிலும் பிளாக் செய்ய விரும்பாத யூஸர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.