ட்விட்டர் சமூக ஊடகத்தில் புதிய கலக்கலான வசதி அறிமுகம்! என்ன தெரியுமா? புகைப்படத்துடன் விளக்கம்
ட்விட்டர் சமூக ஊடகம் அசத்தலான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் பிரபலமாக உள்ள சமூக ஊடகங்களில் ட்விட்டருக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு.
தற்போது ட்விட்டர் அடுத்தவர்களின் டுவிட்களை தேடும் விடயத்தில் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டானது அனைத்து பயனாளர்களுக்கும் இன்னும் வரவில்லை. குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே தற்போது கிடைத்துள்ளது.
அதன்படி ஒருவர் பதிவிட்ட டுவிட்களை தேட முதலில் எல்லாம் அவரின் ஐடியை Search ஆப்ஷனில் பதிவிட்டு பின்னர் அந்த டுவிட் தொடர்பான keyword-ஐ டைப் செய்து அந்த டுவிட்டை கண்டுபிடிக்கலாம்.
ஆனால் தற்போதைய புதிய அப்டேட்டின் படி, நாம் எந்த Userன் பழைய டுவிட்களை தேட விரும்புகிறோமோ அவரின் Profileக்குள் செல்ல வேண்டும். பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளபடி புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Search ஆப்ஷனை கிளிக் செய்து அவரின் டுவிட்களை keyword மூலம் தேடி எடுக்கலாம்.
இதன்படி முன்பு போல இல்லாமல் குறித்த Userன் ஐடியை போட்டு டுவிட்களை இனி எளிதாக தேட முடியும், இந்த புதிய அப்டேட் வசதி அனைத்து பயனாளர்களுக்கும் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.