ட்விட்டரை விலைக்கு வாங்க எலான் மஸ்க் மீண்டும் முயற்சி: இடைநிறுத்தப்பட்டது பங்கு வர்த்தகம்
ட்விட்டர் நிறுவனத்தின் ஒற்றை பங்கை $54.20 வாங்க எலான் மஸ்க் விருப்பம்.
போட் கணக்குகளின் எண்ணிக்கையால் தோல்வியில் முடிந்தது முதல் ட்விட்டர் ஒப்பந்தம்.
உலகின் முதல் மிகப்பெரிய பணக்காரர் ஆன எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரின் பங்கு ஒன்றிக்கு $54.20 என்ற ஒப்பந்தத்தை தொடர முன்வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, எலான் மஸ்க் சில வார இடைவெளியில் போட் கணக்குகளின் எண்ணிக்கை சுட்டிக் காட்டி ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார்.
இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்தது, மேலும் இரு தரப்பினரும் அக்டோபர் 17ம் திகதி நீதிமன்றத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
EPA
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ட்விட்டரின் ஒரு பங்கிற்கு $54.20 என்ற ஒப்பந்தத்தை தொடர முன்வந்துள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மஸ்கின் வழக்கறிஞர்கள் திங்கள்கிழமை இரவு ட்விட்டருக்கு புதிய திட்டத்தை வழங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாய் கிழமை திட்டமிடப்பட்ட இந்த விஷயத்தில் அவசர விசாரணைக்கு முன்னதாக டெலாவேர் நீதிமன்றத்தில் மஸ்க் வழக்கறிஞர்கள் ஒரு ரகசிய கடிதத்தை தாக்கல் செய்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணி எலிசபெத்தை புறக்கணித்த இளவரசி மேகன் மார்க்கல்: மீண்டும் ஒளிபரப்பானது Spotify போட்காஸ்ட்
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தகம் இடைநிறுத்துவதற்கு முன்பு, பங்குகள் 13% அதிகரித்து $47.95 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.