Twitter-ல் இனி பணம் சம்பாதிக்கலாம்! எலான் மாஸ்க் அதிரடி அறிவிப்பு
ட்விட்டரில் இனி பணம் சம்பாதிக்கும் வகையில் புதிய திட்டத்தை எலான் மஸ்க் (Elon Musk) அறிவித்துள்ளார்.
Twitter-ல் அங்கீகார குறியீடு (verified icon) பெற்றவர்கள் இனி பணம் சம்பாதிக்க வாய்ப்பை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரை வாங்கியதிலிருந்து அடுத்தடுத்த அதிரடியான திட்டங்களையும் முடிவுகளையும் வெளியிட்டு வரும் எலான் மஸ்க், ட்விட்டரில் verified account வைத்திருப்பதற்கு மாதச் சந்தா நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.
பின்னர், 10 லட்சம் பேருக்கு மேல் பின் தொடரும் கணக்குகளுக்கு மட்டும் கட்டணம் கிடையாது என அறிவித்தார்.
Creator:learnersenvironment
இப்போது, அங்கீகாரத்திற்காக மாத கட்டணம் செலுத்தும் பயனாளர்கள் பணம் சம்பாதிக்கும் வகையில் புதிய திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் திட்டத்தின்படி, அங்கீகாரம் பெற்ற பயனாளர்களின் ட்வீட்களுக்கு, பதில்கள் வரும் இடத்தில் விளம்பரங்களும் இடம்பெறும் என்றும், அந்த விளம்பரங்களின் மூலம் ட்விட்டருக்கு கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகை, பயனாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனம் இதற்காக முதல்கட்டமாக இலங்கை பணமதிப்பில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூபா. 150 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக லிண்டா (Linda Yaccarino) பதவியேற்ற பின்னர், சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விளம்பரம் மூலம் வருவாயை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Make Money On Twitter, Elon Musk, Twitter Money, Twitter Monetization