Twitter வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி? அதுக்கு சில tricks இருக்கு
ட்விட்டரில் இருந்து வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? இந்தோ சில எளிய வழிகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான ட்விட்டர், உலகளாவிய மக்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
இதில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இருப்பினும், ட்விட்டரிலிருந்து வீடியோக்களைச் டவுன்லோட் செய்ய நமக்கு ஆப்ஷன் கொடுக்கப்படுவதில்லை.
வேண்டுமானால் அந்த விடியோவை நாம் மீண்டும் பார்க்க அந்த ட்வீட்டுக்கான URL ஐ சேமிக்க வேண்டும். மேலும் பகிர வேண்டும் என்றால், Video Adress-ஐ copy செய்து கொள்ளலாம், அல்லது அந்த டீவீட்டை embed செய்துகொள்ளலாம்.
இருப்பினும், ட்விட்டரில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய சில வழிகள் உள்ளன. ட்விட்டரில் இருந்து வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதற்கான வழிமுறைகள் படிப்படியாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கு நேரடி வழிகள் எதுவும் இல்லை, ஆனால் அதைச் செய்ய உங்களை அனுமதிக்கும் வலைத்தளங்கள் நிறைய உள்ளன. அவற்றில் SaveTweetVid மற்றும் TwitterVideoDownloader போன்ற வ;வலைத்தளங்களின் மூலமாக அதைச் செய்யலாம்.
ட்விட்டரில் இருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்வது எப்படி?
1, உங்கள் டெஸ்க்டாப் browser-ல் ட்விட்டருக்கு செல்க.
2, நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் வீடியோவைக் கண்டறியவும்.
3, வீடியோவைக் கொண்ட ட்வீட்டைக் கிளிக் செய்க.
4, அந்த டீவீட்டின் URL அல்லது வீடியோவில் ரைட் கிளிக் செய்து வீடியோ முகவரியை காப்பி செய்துகொள்ளுங்கள். (Copy Video Adress)
5, இப்போது SaveTweetVid அல்லது TwitterVideoDownloader வலைத்தளத்துக்கு செல்லவும்.
6, காப்பி செய்த URL அல்லதுVideo Adress-ஐ வலைத்தளங்களில் வழங்கப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
7, பிறகு அதன் பக்கத்தில் இருக்கும் Download என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
8, இரண்டு வலைத்தளங்களும் உங்களுக்கு வீடியோவின் தரத்தை சோர்வு செய்யும் வாய்ப்பை வழங்கும். வீடியோவைப் பொறுத்து இவை மாறுபடும்.
9, இங்கே, நீங்கள் விரும்பும் தரத்திற்கு அடுத்த டவுன்லோட் பட்டனை Right Click கிளிக் செய்து Save Link As கிளிக் செய்யலாம். உடனடியாக தானாகே உங்களுடைய வீடியோ பதிவிறக்கம் ஆகிவிடும்.
10, மாற்றாக, நீங்கள் டவுன்லோட் பட்டனை நேரடியாக கிளிக் செய்யலாம். அப்போது அந்த வீடியோ முழுத்திரையில் ஓட தொடங்கும். அந்த வீடியோவில் வலது கிளிக் செய்து Save Video என கிளிக் செய்து பதிவிறக்கலாம். (நீங்கள் Chrome-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால் Ctrl + S).
11, அடுத்தாக புதிய விண்டோ ஒன்று வரும், அங்கு Save பட்டனை கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகிவிடும். நீங்கள் பதிவிறக்க விரும்பிய ட்விட்டர் வீடியோ நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஒரு MP4 பார்மாட்டில் காண்பிக்கப்படும்.