உடல் முழுவதும் தங்க நகைகளுடன் வலம் வரும் பிரபல ரவுடி கனடாவுக்கு தப்பியோட்டம்! சிக்கிய 2 கூட்டாளிகள்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரவுடி மற்றும் பயங்கரவாதியான அர்ஸ்தீப் சிங் தற்போது கனடாவில் வசிக்கும் நிலையில் அவரின் இரண்டு கூட்டாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப்பின் மோகாவை சேர்ந்தவர் அர்ஸ்தீப் சிங் என்கிற அர்ஸ் தாலா. அர்ஸ்தீப் ஒரு ரவுடி கும்பல் தலைவனாக இருந்து பயங்கரவாதியாக மாறியவன். பஞ்சாபில் பல பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கனடாவுக்கு தப்பியோடிய அர்ஸ்தீப்பை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த பஞ்சாப் காவல்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, எப்போதும் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டிருப்பது இவர் வழக்கமாகும்.
இந்த சூழலில் தான் அர்ஸ்தீப்பின் முக்கிய உதவியாளர்களான ஹர்ஷ் குமார் மற்றும் ராகவ்வை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து MP-5 துப்பாக்கி மற்றும் 44 தோட்டாக்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இருவருக்கும் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையில் கைதான இருவரும் பொலிஸ் காவலுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.