கர்நாடகாவில் நல்ல மழை பெய்ய 2 சிறுவர்களுக்கு நடந்த வினோத திருமணம்!
கர்நாடகாவில் நல்ல மழை பெய்ய 2 சிறுவர்களுக்கு திருமணம் செய்த சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 சிறுவர்களுக்கு நடந்த திருமணம்
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், கங்கேனஹள்ளி என்ற கிராமத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காக இரண்டு சிறுவர்களுக்கு திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, 2 சிறுவர்களை கிராம மக்கள் தேர்ந்தெர்ந்தெடுத்து அவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமணம் செய்ய தடபுடலாக ஏற்பாடு செய்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 2 சிறுவர்களும் திருமண விழாவில், மணமகன், மணமகளின் பாரம்பரிய உடை அணிந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |