ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு இரண்டு முக்கிய தகவல்கள்
ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், இனி இரண்டு மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
இரண்டு மாற்றங்கள்
பிரெக்சிட் காரணமாக, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பிரித்தானியா ஏற்கனவே பல்வேறு விதிகளுக்கு உட்பட வேண்டியதாயிற்று.
இந்நிலையில், ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் பிரித்தானியர்கள், மீண்டும் இரண்டு மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
1. Entry/Exit System (EES)
ஒன்று, ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் பிரித்தானியர்கள் இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்கும்.
ஆம், ஐரோப்பா, entry-exit system (EES) என்னும் ஒரு நடைமுறையை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது, ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் பிரித்தானியர்களின் பாஸ்போர்ட்களில் முத்திரை பதிக்கப்படுவதற்கு பதிலாக, இனி அவர்கள் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டியிருக்கும்.
ஆகவே, ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் பிரித்தானியர்கள், இனி விமான நிலையங்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடும்.
2. ETIAS கட்டணம் அதிகரிப்பு
இரண்டாவது, ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் பிரித்தானியர்கள் ETIAS என்னும் பயண அங்கீகாரம் பெறுவதற்கான கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
அத்துடன், அந்த கட்டணம் அதிகரிக்கவும் உள்ளது.
ஐரோப்பாவுக்குப் பயணிப்பவர்கள் 7 யூரோக்கள் பயண அங்கீகார கட்டனம் செலுத்தவேண்டியிருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது 20 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |