ஜேர்மனியில் வீடொன்றில் சடலங்களாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகள்: கைது செய்யப்பட்ட பெண் யார்?
ஜேர்மன் நகரமொன்றிலுள்ள வீடொன்றில், இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கைது
நேற்று, தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Hockenheim நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், முறையே எழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிள்ளைகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டார்கள்.
சம்பவ இடத்தில் இருந்த 43 வயது பெண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிசார், அவர் அந்த பிள்ளைகளைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகிறார்கள்.
Image: Renée Priebe/PR-Video/dpa/picture alliance
யார் அந்தப் பெண்?
பொலிசார், அந்தப் பெண், அந்தக் குழந்தைகளின் உறவினர் என்று மட்டுமே கூறியுள்ள நிலையில், அவர் அந்தப் பிள்ளைகளின் தாயா என்பது குறித்து பதிலளிக்க மறுத்துவிட்டார்கள்.
அத்துடன், அந்த பிள்ளைகள் குறித்த எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.