கனேடிய நகரமொன்றில் ரயில் மோதி பதின்மவயது பிள்ளைகள் இருவர் பலி: பதில் கிடைக்காத கேள்விகள்
கனேடிய நகரமொன்றில், ரயில் மோதி பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
ரயில் மோதி பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் பலி
ரொரன்றோவில், திங்கட்கிழமை இரவு 10.05 மணிக்கு, பதின்மவயதுப் பிள்ளைகள் இருவர் மீது ரயில் மோதியதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்கள்.
அங்கு சென்றபோது, 16 வயதுப் பையன் ஒருவனும், 14 வயது பெண் ஒருத்தியும் உயிரிழந்துகிடந்துள்ளார்கள். உடனடியாக பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
பதில் கிடைக்காத கேள்விகள்
பிள்ளைகள் இருவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அந்த நேரத்தில் எதற்காக அந்த பகுதிக்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் குற்றவியல் சம்பவம் எதுவும் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரயில் பாதையைக் கடப்போர் கவனமாக நடந்துகொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |