உலகின் வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் இரண்டு நகரங்கள்!
உலகின் வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்தின் இரண்டு நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சுவிஸ் நகரமான சூரிச், உலகின் வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும், ஜெனீவா ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளன.
நேற்று வெளியிடப்பட்ட Economist Intelligence Unit (EIU) தரவரிசைப் பட்டியலில், சூரிச் ஏழாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஜெனீவா, எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
The EIU தரவரிசைப் பட்டியல், ஒரு நகரத்தின் நிலைத்தன்மை, மருத்துவ வசதி, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து விடயங்களின் கீழ், 30 காரணிகளை ஆராய்ந்து உருவாக்கப்படுகிறது
சூரிச்சும் ஜெனீவாவும், மருத்துவ வசதியில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளன. அத்துடன், இரண்டு நகரங்களுமே, நிலைத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய விடயங்களிலும் தரவரிசைப் பட்டியலில் உயர்ந்த இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.