இலங்கை வெலிகமவில் துப்பாக்கிச் சூடு!
இலங்கையில் வெலிகமவில் இன்று துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலிகம பிரதேசத்தில் இன்று (மே 14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
வெலிகம கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதவுங்கள்... இலங்கை மக்களை நாடும் காவல்துறை
பாதிக்கப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.
இதனையடுத்து நாடு முழுவமு் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. முன்னதாக அரசாங்கம் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது.
மே 9 ஆம் திகதி விதிக்கப்பட்ட 24 மணி நேர ஊரடங்குச் சட்டம் மே 12 மற்றும் மே 13ம் திகதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதிக்க சில மணிநேரங்களுக்கு தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.