சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்கு சென்ற இளம்பெண்கள் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்
சுவிட்சர்லாந்தில் ஆண் ஒருவரும், இளம்பெண்கள் இருவரும் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றிருந்தனர்.
இத்தாலியைச் சேர்ந்த Martina Svilpo (29), Paola Viscard (28) மற்றும் Valerio Zolla (27) என்னும் அந்த மூவரும் Vincent Pyramid என்ற பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், வானிலை மோசமடைந்துள்ளது.
ஹெலிகொப்டரில் சென்றுகொண்டிருந்த இத்தாலிய மீட்புக்குழுவினர் கண்களில் அவர்கள் பட்டும், அவர்களை சென்றடைய மீட்புக்குழுவினரால் இயலவில்லை. ஆகவே, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் வழிகாட்டிகள் அவர்களை மீட்கச் சென்றுள்ளார்கள்.
இரவு 9 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, Martinaவும் Paolaவும் உறைந்துபோய்விட்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் பெண்கள் இருவரும் இறந்துவிட, Valerio மட்டும் ஹெலிகொப்டர் மூலம் சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவர் frostbite என்னும் பனியால் ஏற்படும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். என்றாலும், அவர் உயிர் பிழைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது