லொட்டரில் 4 மில்லியன் பவுண்ட்ஸ் வென்ற பிரித்தானிய நண்பர்கள்! ஆனால் கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
லண்டனில் நண்பர்கள் இருவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் சுமார் 4 மில்லியன் பவுண்ட்ஸ் பரிசாக விழுந்துள்ளது.
லண்டனில் உள்ள Clapham நகரில் வசித்து வருபவர்கள் Mark Goodram (38) மற்றும் Jon Ross Watson(34). இந்த இரண்டு நபரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு சுமார் 4 மில்லியன் பவுண்ட்ஸ் பரிசாக விழுந்துள்ளது.
இதையடுத்து இருவரும் பணத்தை கடனாக வாங்கி நண்பர்களுக்கு பிரம்மாண்ட விருந்து வைத்து தங்கள் சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். இதையடுத்து இருவரும் வாங்கிய லொட்டரி சீட்டை Camelot என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.
அப்போது அந்த நிருவனத்தின் அதிகாரி ஒருவர் இவர்களை தொடர்பு கொண்டு உங்கள் சீட்டிற்கு பரிசு விழுந்தது உண்மை என்று தெரிவித்தார். அதன் பிறகு வங்கி கணக்கு குறித்து அவர் கேட்ட போது Jon Ross Watson முன்னுக்கு பின் முரண்பட பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் நிறுவனத்தின் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதில், Jon Ross Watson சமர்ப்பித்தது வேறு ஒருவரின் லொட்டரி என்பதும், அதை இவர்கள் களவாடியது வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து Camelot நிறுவனம் சேகரித்த விடயங்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் இருவரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். Jon மற்றும் Mark ஆகிய 2 நண்பர்களும் வீடு புகுந்து களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.