அமெரிக்காவில் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள் இருவர்
அமெரிக்காவிற்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் இருவர், சாலை விபத்தொன்றில் பலியானார்கள்.
சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்கள்
சனிக்கிழமையன்று, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற சாலை விபத்தொன்றில், Nivesh Mukka (19) மற்றும் Goutham Kumar Parsi (19) என்னும் இரண்டு மாணவர்கள் பலியானார்கள். அரிசோனா பல்கலையில் கணினி அறிவியல் பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த இருவரும், இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
Two Indian Students Die in US
— Sudhakar Udumula (@sudhakarudumula) April 22, 2024
Tragic Road Accident Claims Lives
Two young students from Telangana, India, met with a tragic end in a road accident in the United States. Mukka Nivesh, aged 20, from Karimnagar, and Goutham Kumar, 19, from Station Ghanpur, passed away on Saturday… pic.twitter.com/A5kSjrkQXj
கல்லூரியிலிருந்து கார் ஒன்றில் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு கார் ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்தபோது Niveshம் Gouthamம் பயணித்த கார், எதிரே வந்த ஒரு காருடன் மோதியுள்ளது.
சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் பலியாக, இரண்டு கார்களின் சாரதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |