மலிங்கா உடனான உரையாடலின் போது ஐபிஎல் குறித்த உண்மையை வெளிப்படுத்திய வனிந்து ஹசரங்கா!
மலிங்கா உடனான நேரலையின் போது ஐபிஎல் குறித்த உண்மையை இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் வனிந்து ஹசரங்கா வெளிப்படுத்தியுள்ளார்.
பந்து வீச்சில் தொடர்ந்து அசத்தி வரும் இலங்கை சுழற்பந்து நட்சத்திரம் ஹசரங்கா, ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
அதேசமயம், 2021 ஐபிஎல் தொடர் துபாயில் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், தங்கள் அணிக்காக விளையாடும் படி 4 ஐபிஎல் அணிகள் வனிந்து ஹசரங்கா அனுகியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவுடனான யூடியூப் சேனலில் இடம்பெற்ற உரையாடலில் ஐபிஎல் குறித்து உண்மையை ஹசரங்கா வெளிப்படுத்தியுள்ளார்.
லசித் மலிங்காவிடம் தனது யூடியூப் சேனலில் பேசிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 மறுதொடக்கத்தின் ஒரு பகுதியாக இரு ஐபிஎல் அணிகள் தன்னை அணுகியுள்ளதாக கூறினார்.
எனினும், எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அணிகள் இதுவரை முறையான கோரிக்கையை அனுப்பவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் ஹசரங்கா கூறினார்.