அவுஸ்திரேலியாவில் பாதசாரியாக சென்ற சிறுவன் பரிதாப மரணம்
அவுஸ்திரேலியாவில் ute வகை கார் மோதியதில் 4 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
பரிதாப மரணம்
பிரிஸ்பேன் நகருக்கு தெற்கே ரீஜென்ட்ஸ் பார்க்கின் கிரீன் சாலையில் 33 வயது நபர் ஒருவரும், நான்கு வயது சிறுவனும் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது ute கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில் அவர்கள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலேயே குறித்த பாதசாரிகள் உயிரிழந்ததை குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய ரீஜெண்ட்ஸ் பார்க்கைச் சேர்ந்த 41 வயது சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
இந்த விபத்தையடுத்து கிரீன் சாலையின் இரு திசைகளிலும் மூடப்பட்டது. இச்சம்பவம் குறித்து தடயவியல் விபத்து பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |