பயங்கர வெடிப்பு தொடர்பில் முகமூடி அணிந்த இருவர் கைது
அமெரிக்காவின் ஹார்வர்ட் மருத்துவப் பாடசாலையில் நடந்த வெடிப்பு தொடர்பில், முகமூடி அணிந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிப்பு நிகழ்வு
அமெரிக்காவில் ஹார்வர்ட் மருத்துவப் பாடசாலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வெடிப்பு நிகழ்வு ஏற்பட்டது.
அதன் பின்னர் காவல்துறையின் கூற்றுப்படி, வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து இரண்டு பேர் தப்பிச் செல்வது காணப்பட்டது. முகமூடி அணிந்திருந்த இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டனர்.
இந்த நிலையில், Massachusettsஐ சேர்ந்த இரண்டு பேரை FBIயின் பாஸ்டன் கூட்டு பயங்கரவாதப் பணிக்குழு மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லோகன் டேவிட் பேட்டர்சன் மற்றும் டொமினிக் ஃபிராங்க் கார்டோஸா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேட்டர்சன் (18) பிளைமவுத்தைச் சேர்ந்தவர் என்றும், கார்டோஸா (20) போர்னைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீ அல்லது வெடிபொருள் மூலம் சேதத்தை ஏற்படுத்த சதி செய்ததாக இருவரும் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்கள் இருவரும் ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
குறித்த நபர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மூன்று ஆண்டுகள் மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் 250,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |