பிரித்தானியா நோக்கி வந்த புலம்பெயர்வோர் படகில் ஏற்பட்ட துயரம்
Two men killed on packed mega dinghy bound for Britain: பிரித்தானியா நோக்கி வந்த புலம்பெயர்வோர் படகில் பயணித்த இருவர் மாரடைப்பால் பலியாகியுள்ளார்கள்.
திங்கட்கிழமை அதிகாலை, சுமார் 80 புலம்பெயர்வோருடன் பிரித்தானியா நோக்கி வந்துகொண்டிருந்த பிரம்மாண்ட படகொன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.
ஏற்பட்ட துயரம்
பிரான்சிலிருந்து புறப்பட்ட அந்த படகு, பிரான்ஸ் கடற்பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாய்க்குள் நுழைந்து சுமார் ஒரு மைல் தூரம் பயணித்த நிலையில், திடீரென அதன் எஞ்சினில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தீப்பற்றியுள்ளது.

படகிலிருந்தவர்கள் பயந்து அலற, மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து படகிலிருந்தவர்களை மீட்கத் துவங்கியுள்ளனர்.
அப்போது, படகிலிருந்த 20 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் உடலில் தீப்பற்றியதால் படுகாயமடைந்திருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களை மீட்டபின், வேறு யாருக்காவது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்று பார்த்தால், இரண்டு ஆண்கள் மாரடைப்பால் துடித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக செவிலியர் ஒருவர் உதவியுடன் இருவருக்கும் உயிர் காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 43 நிமிடங்கள் அவர்களைக் காப்பாற்ற போராடியும், துரதிர்ஷ்டவசமாக அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.