கொளுந்துவிட்டு எரியும் கட்டிடம்: சிறுமியை காப்பாற்றிய இளைஞர்- திக் திக் நிமிடங்கள்
ரஷ்யாவின் மாஸ்கோவில் தீப்பிடித்த கட்டிடத்தின் 9வது மாடியில் சிக்கிக்கொண்ட சிறுமியை இரு இளைஞர்கள் இணைந்து காப்பாற்றிய வீடியோ வெளியாகி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கடந்த 29 திகதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.
அதில் சிறுமி ஒருவர் 9வது மாடியில் சிக்கிக்கொண்டதை தொடர்ந்து அவரை மீட்கும் முயற்சியில் இரு இளைஞர்கள் ஈடுபட்டு அந்த சிறுமியை வெற்றிகரமாக காப்பாற்றினார்கள்.
இதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீரதீர செயல் செய்த அந்த இளைஞர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
#Watch | This #video shows two men saving a young girl from a burning 9th floor apartment in Moscow, #Russia. The heroic act captured from a distance has now gone #viral, winning praises for the men who risked their lives to rescue the girl. pic.twitter.com/teYd9wlqZD
— EastMojo (@EastMojo) January 31, 2022
Robot vomit என்பவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், "முதலில் இதை நான் பார்க்கும் போது எனக்கு கண்கள் கலங்கிவிட்டது. நமக்கு வரும் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் பிறருக்கு செய்யும் உதவிகள் மனிதாபிமானத்தின் சிறப்பு. அவர்கள் இருவருக்கும் மிகுந்த மரியாதைகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவருக்கு கையில் தீ காயங்களும், மற்றொருவருக்கு உடைந்த கண்ணாடி துண்டுகளால் சில வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.