லண்டனில் கெட்டுப்போன இறைச்சி விற்ற நபர்கள்! தண்டனையை உறுதிப்படுத்திய கிரவுன் நீதிமன்றம்!
பிரித்தானியாவில் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்ற மாமிசத்தை விற்பனை செய்த இரண்டு பேர் சிறையில் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இறைச்சிகள் விலங்குகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்ட இறைச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 63 வயதுடைய அந்தோனி ஃபியர் என்பவருக்கு 42 மாதங்கள் சிறை தண்டனையும், 40 வயதுடைய ஆஸர் இர்ஷாத் என்பவருக்கு 35 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து லண்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020 கண்டறியப்பட்ட இந்த சம்பவத்தின் போது, பொதுமக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இறைச்சி கடை ஒன்றை சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ளவர்கள் கெட்டுப்போன இறைச்சியை சுத்தம் செய்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது இர்ஷாத் அலி அப்சல் மற்றும் அர்ஷாத் அக்தர் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களில் அர்ஷாத் அக்தர் விசாரணையின் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |