ஜேர்மனியில் பட்டாக்கத்திகளுடன் தாக்குதல் நடத்திய இருவர்: ஹெலிகொப்டர் மூலம் தேடும் பொலிசார்
ஜேர்மன் நகரமொன்றில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றிற்குள் பட்டாக்கத்திகளுடன் நுழைந்த இருவர் அங்குள்ளவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார்கள்.
இருவர் நிலைமை கவலைக்கிடம்
மேற்கு ஜேர்மனியிலுள்ள Duisburg நகரில் அமைந்துள்ள கூடம் ஒன்றிற்குள் பட்டாக்கத்திகளுடன் நுழைந்த இருவர் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்குபேர் படுகாயமடைந்துள்ளனர்.

Image: Getty Images
அவர்களில் இருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்கியவர்கள் தப்பியோட, பொலிசார் அவர்களை ஹெலிகொப்டர் உதவியுடன் தேடிவருகிறார்கள்.
எதனால் பிரச்சினை துவங்கியது என்பது தெரியாத நிலையில், பொலிசார் உடற்பயிற்சிக்கூடத்திலிருந்தவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Image: Getty Images/iStockphoto

Image: Getty Images/iStockphoto