பிரித்தானியாவில் மேலும் இரண்டு புதுவகை கொரோனா வைரஸ்கள்? வெளியாகியுள்ள கவலையளிக்கும் தகவல்
பிரித்தானியாவில், மேலும் இரண்டு புதுவகை கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரிஸ்டலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கக்கூடியதாக உள்ளதாகவும், லிவர்பூலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வைரஸ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய அரசின் அறிவியல் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது என்கிறது அந்த செய்தி.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை இரண்டுமே முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க வகை வைரஸ்களுடன் சில விடயங்களில் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ்களில் E484K என்னும் திடீர் மாற்றம் காணப்படுவதாகவும், அது வைரஸின் மேல் பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் முள் போன்ற அமைப்பிலுள்ள புரதத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.