ரயில் பாதையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது ரயில் மோதிய வழக்கு: நீதிமன்றம் அதிரடி
பிரித்தானியாவில், ரயில் பாதையில் வேலை செய்துகொண்டிருந்த இருவர் மீது ரயில் மோதியதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
அந்த வழக்கில், தற்போது ரயில்வே நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதிய ரயில்
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், காரத் (Gareth Delbridge, 64) மற்றும் மைக்கேல் (Michael Lewis, 58) என்னும் இரு ரயில்வே பணியாளர்கள் வேல்ஸ் நாட்டிலுள்ள Port Talbot என்னுமிடத்தில் அமைந்துள்ள ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று மோதியதில் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
விடயம் என்னவென்றால், அந்த இடத்தில், அந்த நேரத்தில், அந்த வேலைக்கான அவசியம் எதுவும் இல்லாதிருந்திருக்கிறது.
ஆனால், அது குறித்து அந்த பணியாளர்களுக்கு நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
அத்துடன், அந்த ரயில் பாதையில் வேலை நடந்தும், அந்த பாதை மூடப்படவில்லை.
மேலும், அந்தப் பணியாளர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த கருவிகள் ஏற்படுத்திய சத்தத்தால் அவர்களுக்கு ரயில் வருவது கேட்கவில்லை.
ரயில் வருவதை எச்சரிக்கும் கருவிகளும் அங்கு இல்லை. அத்துடன், அவர்கள் வளைவு ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்ததால், ரயில் வருவதைப் பார்க்கவும் முடியவில்லை.
ஆக, ரயில்வே நிர்வாகம் அந்தப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக எதையுமே சரியாக செய்யவில்லை என வாதம் முன்வைக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 42 நாட்களுக்குள் 3,750,000 பவுண்டுகள் இழப்பீடும், வழக்குச் செலவுக்காக 175,000 பவுண்டுகளும் வழங்கவேண்டும் என ரயில்வே நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |