ஒரே மருத்துவமனையில் பிள்ளை பெற்றெடுத்த இரு பிரித்தானிய தாய்மார்கள் மரணம்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம்

London Death
By Arbin Feb 25, 2023 05:01 PM GMT
Report

பிரித்தானியாவில் ஒரே மருத்துவமனையில் ஒரே மகப்பேறு மருத்துவரால் பிள்ளை பெற்றெடுத்த இரு தாய்மார்கள் 6 வார இடைவெளியில் மரணமடைந்த சம்பவத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிசேரியன் முறைப்படி மகப்பேறு

குறித்த தாய்மார்கள் இருவரும் தோல் வியாதியால் திடீரென்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். மட்டுமின்றி, இருவருமே சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுத்துள்ளனர்.

ஒரே மருத்துவமனையில் பிள்ளை பெற்றெடுத்த இரு பிரித்தானிய தாய்மார்கள் மரணம்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம் | Two New Mums Died Herpes Contracted

29 வயதான கிம் சாம்ப்சன் என்பவர் தமது மகனை பெற்றெடுத்த பின்னர் தீவிரமான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கென்ட்டின் மார்கேட்டில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையிலேயே இவருக்கு மகப்பேறு நடந்துள்ளது.

இவர் இறந்த 6 வாரங்களில் இன்னொரு தாயார், 32 வயதான சமந்தா முல்காஹி என்பவர் சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுத்த பின்னர் தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

2018 மே 3ம் திகதி மகப்பேறுக்காக சாம்ப்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, சிக்கல் இருப்பதாக கூறி சிசேரியன் முறைப்படி பிள்ளை பெற்றெடுக்க பரிந்துரைத்துள்ளனர். அறுவை சிகிச்சையின் பின்னர் அவருக்கு புதிதாக ரத்தமும் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாட்களில் கிம் சாம்ப்சன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால், அதன் பின்னர் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டதுடன், நடக்கவும் முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அவரது நிலை மோசமடைய, மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் இன்னொரு மருத்துவமனை

அவருக்கு பாக்டீரியா செப்சிஸ் தொடர்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நிலை மோசமடைய, லண்டனில் இன்னொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஒரே மருத்துவமனையில் பிள்ளை பெற்றெடுத்த இரு பிரித்தானிய தாய்மார்கள் மரணம்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் சம்பவம் | Two New Mums Died Herpes Contracted

@swns

அங்கே முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அபாயகரமான ஹெர்பெஸ் தொற்று பாதித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் மே 22 ம் திகதி சிகிச்சை பலனின்றி சாம்ப்சன் மரணமடைந்துள்ளார்.

இவர் இறந்த 6 வாரங்களுக்கு பின்னர் ஹெர்பெஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சமந்தா முல்காஹி என்ற தாயாரும் மரணமடைந்துள்ளார். சமந்தா முல்காஹி என்பவருக்கும் சிசேரியன் முறைப்படி மகப்பேறு முன்னெடுத்தவர் ஒரே மருத்துவர் என்றே தெரியவந்துள்ளது.

பொதுவாக ஹெர்பெஸ் தொற்றானது தோலின் மூலம் பரவுகிறது. 25 வயதை எட்டும் 70% பேர்களுக்கும் ஹெர்பெஸ் தொற்று பாதிப்பு காணப்படுவதாகவே கூறுகின்றனர். தற்போது இந்த இரு தாய்மார்களின் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்க உரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US