சுவிஸில் இரு பள்ளி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறிய மர்ம நபர்
சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரிடம் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Chur பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் அந்த இரு பள்ளி மாணவர்களின் செயல் பெற்றோர் மற்றும் பொலிசாரால் பாராட்டப்படுகிறது.
வியாழக்கிழமை பகல் மாணவிகள் இருவரும் பள்ளிக்கு செல்லும் வழியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வாகனத்தில் வந்த ஒருவர் மாணவிகள் இருவரிடமும் ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் இரு மாணவிகளும் துணிந்து, அந்த மர்ம நபருக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், பள்ளிக்கும் திரும்பியுள்ளனர். இச்சம்பவத்தை மாணவிகள் இருவரும் அன்றைய தினம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
கலக்கமடைந்த பெற்றோர்கள் உடனையே தொடர்புடைய பள்ளிக்கும் பொலிசாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவிகள் இதுபோன்ற சூழலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பில் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மட்டுமின்றி, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் பகுதிகளில் அதிக கண்காணிப்பில் ஈடுபடவும் பொலிசார் முடிவு செய்துள்ளனர்.