ஸ்காட்லாந்தில் காணாமல் போன 2 சகோதரிகள்: தேடுதல் வேட்டை தீவிரம்
ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் 2 சகோதரிகள் மாயமான நிலையில் அவர்களை கண்டுபிடிக்கும் தேடல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
காணாமல் போன சகோதரிகள்
ஸ்காட்லாந்தின் அபெர்டீனில்(Aberdeen) 32 வயதான இரண்டு சகோதரிகளான எலிசா(Eliza) மற்றும் ஹென்ரியட்டா ஹுஸ்டி(Henrietta Huszti) காணாமல் போயியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:12 மணிக்கு மார்க்கெட் தெருவில் உள்ள விக்டோரியா பாலத்தை இருவரும் கடந்து செல்வது கண்காணிப்பு கேமராக்களில் கடைசியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
பாலத்தை கடந்த பிறகு, அவர்கள் Dee நதியின் ஓரமாக அபர்டீன் போட் கிளப்(Aberdeen Boat Club) நோக்கி செல்லும் பாதையில் திரும்பியுள்ளனர்.
தேடுதல் வேட்டை தீவிரம்
ஸ்காட்லாந்து பொலிஸார் விரிவான தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
தேடல் குழுவில் பொலிஸ் நாய்கள் மற்றும் கடல்சார் பிரிவு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்க "விரிவான விசாரணை" நடந்து வருவதாக தலைமை ஆய்வாளர் டேரன் ப்ரூஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சகோதரிகள் மெலிந்த உடலமைப்பும் நீண்ட பழுப்பு நிற முடியும் கொண்டவர்கள். அவர்கள் அபெர்டீன் நகர மையத்தில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |