Operation Akhal: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டு ராணுவ வீரர்கள்
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் மிக நீண்ட கால நடவடிக்கையான ஆபரேஷன் அகல் தொடங்கப்பட்டு இன்று ஒன்பதாவது நாளை எட்டியது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகளுடனான நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என அடையாளம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், "நாட்டிற்காகப் பணியாற்றிய வீரர்களான எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் ஹர்மிந்தர் சிங் ஆகியோரின் தியாகத்தை Chinar Corps மதிக்கிறது. இந்திய ராணுவம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுடன் ஒற்றுமையாக நிற்கும்" என்று இந்திய ராணுவம் X இல் பதிவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் திகதி அன்று காஷ்மீர் பள்ளத்தாக்கின் அடர்ந்த காடுகள் மற்றும் குகை போன்ற மறைவிடங்களில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளை அழிப்பதற்கு இந்திய இராணுவத்தால் ஆபரேஷன் அகல் (Operation Akhal) தொடங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |