உடற்பயிற்சி சோதனையில் தோல்வியடைந்த 2 முக்கியமான இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!
இலங்கை - வங்கதேசம் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் உடற்பயிற்சி பரிசோதனையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் நடத்தப்பட்ட இந்த உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியுற்ற இருவரும், இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா என்பதை உறுதியாக கூறமுடியாதுள்ளது.
அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை உடற்பயிற்சி பரிசோதனையில் ஈடுபட நேரிடும். அதில் அவர்கள் வெற்றியடைந்தால் மாத்திரமே இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொள்ளவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியடைந்தவர்கள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் என கூறப்பட்டுள்ளது.