அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: சதம் அடித்த இரண்டு இலங்கை வீரர்கள்
அயர்லாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இரண்டு இலங்கை வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அயர்லாந்து அணியின் இரண்டு வீரர்கள் சதம் அடித்துள்ளனர். முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 492 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதிக பட்சமாக அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சதமடித்தனர். மேலும் அதிரடியாக ஆடிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
Another ?️-wicket haul for Prabath Jayasuriya ?#SLvIRE #LionsRoar pic.twitter.com/01j4cQ7S15
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 25, 2023
சிறப்பாக பந்து வீசிய இலங்கை அணியின் பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
சதம் அடித்த தொடக்க ஆட்டகாரர்கள்
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் சிறப்பாக ஆடினர். கேப்டன் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Back-to-back centuries for Dimuth Karunaratne ??#SLvIRE #LionsRoar pic.twitter.com/AIwF5b3CLI
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 26, 2023
மற்றொரு தொடக்க துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்கா 149 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி 5 சிக்சர்களை விளாசினார்.
இதனை தொடர்ந்து வெளிச்சம் குறைவாக இருப்பதன் காரணமாக மூன்றாம் நாளுக்கான போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்றைய ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்துள்ளது. குசல் மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும், நிஷான் மதுஷ்கா 149 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.