இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம்
இங்கிலாந்தில், கட்டுமானப் பணியின்போது இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 5,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள்
நேற்று இங்கிலாந்திலுள்ள Devon என்னுமிடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்று புதைந்திருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
Credit : S.I UXO
உடனடியாக அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த பகுதியிலுள்ள சுமார் 2,000 வீடுகளிலிருந்து சுமார் 5,000 பேரை வெளியேற்றியுள்ளார்கள்.
அத்துடன், Plymouth என்னுமிடத்திலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் வெடிகுண்டு ஒன்று புதைந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் இல்லை: பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு ஆத்திரத்தையூட்டியுள்ள செய்தி
அந்த பகுதியிலுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சாரதிகள் அந்த பகுதிக்கு பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Credit : SWNS
கண்டுபிடிக்கப்பட்டுள்ள குண்டுகள் இரண்டும், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் ஆகும். ஜேர்மன் குண்டுகளான அவற்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் இறங்கிய நிலையில், இரவில் அவர்களால் தங்கள் பணியைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது.
ஆகவே, இன்றும் அவர்கள் தங்கள் பணியைத் தொடர உள்ளதால், அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |