பிரித்தானியாவில் கால்வாயில் தத்தளித்த 2 வயது சிறுவன்: பின்னர் நிகழ்ந்த சோகம்
இரண்டு வயது சிறுவன் வால்வர்ஹாம்ப்டன் கால்வாயில் மூழ்கி உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 வயது சிறுவன் உயிரிழப்பு
பிரித்தானியாவின் வால்வர்ஹாம்ப்டனில்(Wolverhampton) ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு வயது சிறுவன் ஒருவன் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாலை 5:30 மணிக்குப் பின்னர், கால்வாய் பாதையின் அருகே குழந்தை தண்ணீரில் இருப்பதாக அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மேற்கு மிட்லாண்ட் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக தண்ணீருக்குள் இறங்கி சிறுவனை மீட்டு, அவசர முதலுதவி சிகிச்சைகள் வழங்கினர்.
ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான்.
மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஈரானுடன் பேச்சுவார்த்தை!
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வயது சிறுவனின் மரணம் அந்தப் பகுதியில் உள்ள மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |