இங்கிலாந்தில் வீடொன்றில் பற்றிய தீ: இரண்டு சிறுபிள்ளைகள் பலி
இங்கிலாந்தில், வீடொன்றில் தீப்பிடித்ததில், அந்த வீட்டிலிருந்த இரண்டு சிறுபிள்ளைகள் பலியான விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சிறுபிள்ளைகள் பலி
இங்கிலாந்தின் Wolverhampton நகரிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் தீப்பிடித்துள்ளது.
அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணும் இரண்டு சிறுபிள்ளைகளும் வீட்டிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இரண்டு பிள்ளைகள் வீட்டுக்குள் சிக்கியுள்ளார்கள்.
iStock
தகவலறிந்து அந்த வீட்டுக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பாதுகாப்பு கவசங்கள் அணிந்து வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த இரண்டு பிள்ளைகளை வெளியே கொண்டுவந்துள்ளார்க்ள்.
ஆனால், அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தீயில் அந்த வீடு பலத்த சேதம் அடைந்துள்ள நிலையில், தீவிபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |