ஐபிஎல் 2022! குறைந்த விலைக்கு உள்ளே வந்து ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் 2 வீரர்கள்
ஐபிஎல் ஏலத்துக்கான பெயர் பட்டியலில் அடிப்படை விலைக்கு உள்ளே வந்துள்ள 2 வீர்கள் ஏலத்தில் பல கோடிகளுக்கு விலைக்கு வாங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
1214 வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.
1214 வீரர்களில் அபார திறமை கொண்டுள்ள 2 இளம் இந்திய வீரர்கள் வெறும் 20 லட்சம் அடிப்படை விலை தொகைக்கு விண்ணப்பித்து உள்ளார்கள்.
ஆனால் அவர்கள் இருவரும் பல கோடிகளுக்கு ஏலத்தில் செல்ல வாய்ப்புள்ளது.
ஷாருக்கான்
தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் ஷாருக்கான் கடந்த 2021ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரூபாய் 5.25 கோடிகளுக்கு வாங்கப்பட்டார். தொடர்ந்து அபாரமாக பேட்டிங் விளையாடி வரும் ஷாருக்கான் வெறும் 20 லட்சத்துக்கு விண்ணப்பித்துள்ளது பல ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் இவ்வளவு திறமை கொண்டுள்ள இவர் கண்டிப்பாக பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்பதில் சந்தேகமில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
அவேஷ்கான்
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் ஐபிஎல் 2021இல் வெறும் 70 லட்சத்துக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.
தற்போது அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் ஏலத்தில் கோடிகளில் அவேஷ்கான் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.