பட்டுப்புடவைகளில் இவ்வளவு வகைகளா? இது தெரியாம போச்சே!
புடவை என்றாலே பெண்களுக்கு ஒரு மோகம் இருக்கும். அதிலும் பட்டு புடவை என்றால் எங்கு இருந்தாலும் வந்துவிடுவார்கள்.
என்ன தான் இன்றைய தினத்தில் மாடர்ன் ஆடைகள் அணிந்தாலும், புடவை என்றால் முகத்தில் வெக்கத்தோடு அதை விரும்பி அணிந்துக்கொள்வார்கள்.
பட்டுப்புடவைகள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றது.இது பட்டுப் பூச்சியில் இருந்து எடுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட நூல்களினால் நெய்யப்படுகின்றது.
பட்டுப்புடவை என்பது நம் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எந்த சுப காரியங்கள் இருந்தாலும் பட்டு இல்லாமல் நிறைவேறாது.
இளம் வயது பெண்கள் முதல் வயதான மூதாட்டி வரை அனைவரும் பட்டுப்புடவையை விரும்புகின்றார்கள். பட்டுப் புடவைகள் விலை அதிகமானது என்றாலும், அந்த செலவில் ஓர் அர்த்தம் இருக்கும் என்பதே இந்த பட்டுப்புடவைகள் உணர வைக்கும்.
ஒரு நல்லத் தரமான பட்டுப்புடவை 6௦௦ ஆண்டு காலம் வரை நல்ல நிலையில் இருக்கும். ஆகவே பட்டுப்புடவைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
பல வகை பட்டுப்புடவைகள்
காஞ்சீவரம் பட்டு
தமிழ்நாட்டிற்க்கே உரிய அடையாளத்துடன் நெய்யப்படும் ஒரு புடவையான இது காணப்படுகின்றது. இது ஒருவரின் அந்தஸ்த்து, கௌரவம் மற்றும் அவரின் செல்வாக்கை பிரதிபலிக்கின்றது.
இதை அணிந்தாலே சபையில் அவர்கள் அழகாக விளங்குவார்கள். புது மணப் பெண்ணுக்கு இந்த காஞ்சீவரம் பட்டுப் புடவை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பைதானி பட்டு
இது மகாராஷ்டிராவில் தயாரிக்கப்படுகின்றது. இவை பெரும்பாலும் பச்சை, மஞ்சள், ஊதா போன்ற நிறங்களில் கிடைக்கும். இதில் குறிப்பாக பூக்கள் மற்றும் பறவைகளின் வடிவங்கள் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
முகா பட்டு
இது பெரும்பாலும் அஸ்ஸாம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றது. இந்த விலை உயர்ந்த புடவைகள் மஞ்சள், போன்ற கண்ணைக் கவரும் வெளிர் நிறங்களில் தயாரிக்கப்படுகின்றது.
வனாரசி பட்டு
இது விலை உயர்ந்த ஒரு வகையாக உள்ளது. காஞ்சீவரம் புடவைகளுக்கு அடுத்தப்படியாக இந்த வனாரசி பட்டுப் புடவைகளுக்கு இருகின்றது எனலாம். இந்தப் புடவைகள் தங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் தயாரிக்கப்படுகின்றது.
எப்படி பட்டு புடவைகள் வாங்குவது?
அசலை போலவே போலியும் சந்தையில் விற்கப்படுகின்றது. ஆகவே நீங்கள் வாங்கும் பட்டுப்புடவையில் இருக்கும் ஜரிகை நிஜம் தானா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
கலப்படம் இல்லாத பட்டு ஜரிகை. இதை பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். இன்று, பாலியஸ்டர், பட்டு கலவை, தூய ஜரி, பருத்தி என்று கலந்து நெசவு செய்யப் படுகின்றது. அப்படி செய்தாலும், அதன் விலை ஒரு சுத்தமான பட்டுப் புடவைக்கு நிகரானதாக இருக்கின்றது. இது நீங்கள் செலவு செய்யும் பணத்தின் மதிப்பையும் மற்றும் பட்டுப் புடவையின் மதிப்பையும் குறைத்து விடக் கூடும். அதனால் எப்போதும் சுத்தமான பட்டுப் புடவையை மட்டுமே வாங்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |