இராணுவ இரகசியங்களை சாண்ட்விச்சுக்குள் வைத்து வெளிநாட்டுக்கு விற்ற அமெரிக்க பொறியாளர் தம்பதி: சிக்கியது எப்படி?

police United Kingdom
By Balamanuvelan Oct 11, 2021 06:10 AM GMT
Report

அமெரிக்க பொறியாளர் ஒருவர், அமெரிக்க அணு நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான இராணுவ இரகசியங்களை வெளிநாடு ஒன்றிற்கு விற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேரிலேண்ட் பகுதியில் வாழும் Jonathan Toebbe (42) என்ற அந்த பொறியாளர், கடற்படை ஆவணங்கள் சிலவற்றை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி, தான் அணு நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான சில இரகசியங்களை விற்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அது எந்த நாடு என்ற விடயம் வெளிப்படவில்லை.

ஆனால், அந்த நாடு அந்த ஆவணங்களை அமெரிக்க அரசுக்கு அனுப்பி, இப்படி ஒருவர் இராணுவ இரகசியங்களை விற்க முயற்சிப்பதாக உண்மையைக் கூறிவிட்டது.

இராணுவ இரகசியங்களை சாண்ட்விச்சுக்குள் வைத்து வெளிநாட்டுக்கு விற்ற அமெரிக்க பொறியாளர் தம்பதி: சிக்கியது எப்படி? | U S Navy Engineer Wife Charged Selling Submarine

விடயம் வெளியாகியும் Jonathanஐ கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட FBI அதிகாரிகள், அதிகாரிகளில் ஒருவரை அந்த குறிப்பிட்ட நாட்டின் பிரதிநிதி போல் நடிக்க வைத்திருக்கிறார்கள். முதலில் Jonathan அவரை நம்ப மறுக்க, அவர் Jonathanக்கு 10,000 டொலர்களை கிரிப்டோகரன்சியாக அனுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பல தகவல்களை Jonathan அந்த நபருக்கு அனுப்பியிருக்கிறார், தான் FBI அதிகாரி ஒருவருக்கு அந்த தகவல்களை அனுப்புவது தெரியாமலே!

இப்படியே ஏராளமான தகவல்களை Jonathan அனுப்ப, பதிலுக்கு அவருக்கு 100,000 டொலர்கள் வரை அனுப்பப்பட்டிருக்கிறது.

தாங்கள் பிடிபட்டுவிடுவோம் என்பதையும் அவர் கணித்திருக்கிறார். ஆகவே, அந்த குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட்டையும் அவரும் அவரது குடும்பத்தினரும் தயார் செய்து, பயணத்துக்கான பணத்தையும் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

இராணுவ இரகசியங்களை சாண்ட்விச்சுக்குள் வைத்து வெளிநாட்டுக்கு விற்ற அமெரிக்க பொறியாளர் தம்பதி: சிக்கியது எப்படி? | U S Navy Engineer Wife Charged Selling Submarine

இந்நிலையில், முக்கிய தகவல் ஒன்றைக் கொடுப்பதற்காக Jonathan ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல, யாராவது வருகிறார்களா என்று பார்ப்பதற்காக அவரது மனைவி Diana (45) அவருக்கு காவலுக்கு இருந்திருக்கிறார்.

இருவரையும் கையும் களவுமாக பிடித்த FBI அதிகாரிகள், Jonathanஇடமிருந்து ஒரு சாண்ட்விச்சைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அந்த சாண்ட்விச்சுக்குள், பீநட் பட்டருக்கு நடுவில், பிளாஸ்டிக் கவர் ஒன்றிற்குள் பல முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு மெமரி கார்டு இருந்திருக்கிறது.

Jonathanஇன் மனைவி Diana ஒரு ஆசிரியை. தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமையன்று தம்பதியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என தெரிகிறது. Jonathan முதன்முதலில் அந்த வெளிநாட்டைத் தொடர்புகொண்டபோது, அந்த நாட்டு மொழியில் ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், உங்கள் மொழியில் நான் செய்த மோசமான மொழிபெயர்ப்புக்காக வருந்துகிறேன். ஆனால், இந்த கடிதத்தை உங்கள் இராணுவ உளவுத்துறையிடம் கொடுங்கள். இந்த தகவல் உங்கள் நாட்டுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு போலிக் கடிதம் என்று எண்ணிவிடவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Jonathan, 2012ஆம் ஆண்டு முதல், பல ஆண்டுகளாக அமெரிக்க கடற்படையில் அணு நீர் மூழ்கிக்கப்பல்கள் தொடர்பான பணிகளில் பணியாற்றிவந்த பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இராணுவ இரகசியங்களை சாண்ட்விச்சுக்குள் வைத்து வெளிநாட்டுக்கு விற்ற அமெரிக்க பொறியாளர் தம்பதி: சிக்கியது எப்படி? | U S Navy Engineer Wife Charged Selling Submarine

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US