இந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வரக்கூடாதாம்! அப்படி வந்தால் என்ன தெரியுமா?
கனவு என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது.
நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளை முன் கூட்டியே அறியப்படுத்தக்கூடியவையே இந்த கனவுகள் என நம்பப்படுகிறது.
நாம் கனவு காணும் நேரத்தை பொறுத்தே அதற்கான பலன்களும் அமையும்.
கனவில் தெய்வங்கள் வருவது பெரும்பாலும் நமக்கு நல்ல பலன்களையே கொடுக்கும்.
ஆனால் குறிப்பிட்ட சில தெய்வங்களை கனவில் காண்பது ஆபத்தையும் குறிக்கும்.
இந்த தெய்வங்களை காண்பது நன்மையை குறிக்கும்.
முருகப்பெருமான்
கனவில் முருகப்பெருமானோ அல்லது வேலையோ கண்டால் உங்களுடைய தோஷங்கள் நீங்கி உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது என்பது அர்த்தம்.
கோபுர தரிசனம்
கனவில் கோபுர தரிசனமோ அல்லது கோவிலையோ கண்டால் உங்கள் வாழ்வின் துன்பங்கள் மறைந்து நீங்கள் படிப்படியாக மேலே செல்லப்போகிறீர்கள் என்பது அர்த்தம் .
விநாயகர்
கனவில் விநாயகர் வந்தால் உங்கள் கனவுகள் அனைத்தும் வெற்றிப்பெற போகிறது என்பது அர்த்தம்.
ஆலயக்கதவுகள்
நீங்கள் ஆலயக்கதவுகளை திறந்து உள்ளே செல்வது போல கண்டால் உங்கள் துன்பங்கள் நீங்கி வாழக்கை மாறப்போகிறது என்பது அர்த்தம்.
விஷ்ணுப்பெருமான்
கனவில் விஷ்ணுப்பெருமான் வந்தால் உங்கள் வழக்கு சம்பந்தமான பிரச்சினைகள் தீரப்போகிறது என்பது அர்த்தம்.
இந்த தெய்வங்களை காண்பது தீமையை குறிக்கும்.
உக்கிரமான தெய்வங்கள்
கனவில் உக்கிரமான தெய்வங்கள் வந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து நேரப்போகிறது அல்லது உங்களுக்கு பின்னாலிருந்து யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் என்பது அர்த்தம்.
குல தெய்வங்கள்
கனவில் குல தெய்வங்களை கண்டால் நீங்கள் ஏதோவொரு நேத்திக்கடனையோ அல்லது வேண்டுதலையோ நிறைவேற்றவில்லை என அர்த்தம்.
ஆகையால் அதனை உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டுமாம்.