U19 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி.., அபார வெற்றி
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி அபார வெற்றி
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நேற்று முன் தினம் தொடங்கியது.
இதில், நடப்பு சாம்பியனான இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 16 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர் ஆதர்ஷ் சிங், கேப்டன் உதய் சகாரன் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய வங்கதேச அணி 50 ஓட்டங்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
5ஆவது விக்கெட்டிற்கு அரிஃபுல் இஸ்லாம், முகமது ஷிகாப் இணைந்து 77 ஓட்டங்கள் சேர்த்தனர். எனினும் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். முடிவில் வங்கதேச அணி 167 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதையடுத்து இந்திய அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
96 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆதர்ஷ் சிங் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது இரண்டாவது போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து நாளை விளையாடவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |